வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருத்துறைப்பூண்டியில், விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேளாண்சட்டங்களை திரும்ப ெபறக்கோரி திருத்துறைப்பூண்டியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-27 16:16 GMT
திருத்துறைப்பூண்டி,

வேளாண்சட்டங்களை திரும்ப ெபறக்கோரி திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னால் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் சாமிநாதன், ம.தி.மு.க. நகர செயலாளர் கோவி.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் சுந்தர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ராஜா, விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் அமிர்தலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இதேபோல் திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்கத்தின் கிளை தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஏழைத்தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரணமாக ரூ.7,500 வழங்கவேண்டும். இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும். வேளாண்மை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்ககைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்