தூத்துக்குடி அருகே 2 தொழிலாளிகள் மாயம்
தூத்துக்குடி அருகே உப்பு பண்டல் கட்டும் தொழிலாளிகள் 2பேர் மாயமாகினர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே உப்பு பண்டல் கட்டும் தொழிலாளிகள் 2பேர் மாயமாகினர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உப்பு பண்டல் கடும் தொழிலாளி
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு காந்தி நகரைச் சேர்ந்தவர் மாடசாமி (வயது 36) உப்பு பண்டல் கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 21ந் தேதி காலையில் வேலைக்கு செல்வதாக வீட்டில் சொல்லி விட்டு சென்றவர் வேலைக்கும் செல்லாமல் பின்பு மாலையில் வீட்டிற்கும் திரும்பவில்லை, இதுகுறித்து அவரது மனைவி அனுசியா பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கப பெறாததால் முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
இளம்பெண் மாயம்
இதேபோன்று முள்ளக்காடு ராஜீவ் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் முத்துமாரி (வயது 32), இவரும் இவரது கணவர் மிக்கேலும் உப்பு பண்டல் போடும் தொழில் பார்த்து வருகின்றனர். கடந்த 21ஆம் தேதி காலை 9 மணி அளவில் மிக்கேல் தனது மனைவியிடம் நான் வேலைக்கு முன்பாக செல்கிறேன், நீ பின்பு சாப்பாடு எடுத்துக் கொண்டு வா என்று கூறிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.
ஆனால் வெகு நேரமாகியும் முத்துமாரி வேலைக்கு வராத காரணத்தினால் மிக்கேல் திரும்ப வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டில் மனைவி இல்லாதது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் முத்துமாரியின் தாயார் ராமலட்சுமியிடம் இது குறித்து தெரிவித்தார். அவர்கள் எங்கு தேடி பார்த்தும் முத்துமாரி காண கிடைக்காததால் முத்தையாபுரம் போலீசில் புகார் அளித்தனர். இந்த தம்பதியருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
போலீசார் விசாரணை
இந்த 2 வழக்குகளையும் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையில் ேபாலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.