கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஐ.டி. நிறுவன பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

கணவருடன் ஏற்பட்ட குடும்பத்தகராறில் ஐ.டி. நிறுவன பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-27 05:56 GMT
செங்குன்றம், 

சென்னை கொளத்தூர் சுப்ரமணிய 3-வது தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா (வயது 45). இவர், தாம்பரத்தில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வந்தார்.

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வீட்டின் மாடியில் இவர்கள் வசித்து வருகின்றனர். தரைதளத்தில் உள்ள வீட்டில் வினோத்குமாரின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.

நேற்று மதியம் கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால் வினோத்குமார் மனைவியுடன் கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.

பின்னர் மகன், மகள் இருவரும் தரைதளத்தில் உள்ள தங்கள் தாத்தா வீட்டுக்கு சென்று விட்டனர். கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த அனிதா, வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ராஜமங்கலம் போலீசார், தூக்கில் தொங்கிய அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்