காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார்.

Update: 2021-06-27 05:37 GMT
சென்னை, 

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல்லா (வயது 18). கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்னை வந்த இவர், பட்டினப்பாக்கம் ராஜா கிராமணி தோட்டத்தில் தனது நண்பர்களுடன் தங்கி, தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். அப்துல்லா, மேற்கு வங்காளத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். தினமும் தனது காதலியுடன் செல்போனில் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். கடந்த சில நாட்களாக அந்த பெண் அப்துல்லாவிடம் பேசுவதை தவிர்த்ததுடன், காதலையும் கைவிடும் படி கூறியதாக தெரிகிறது. காதல் தோல்வியால் விரக்தி அடைந்த அப்துல்லா, தான் தங்கி இருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் சென்னை எம்.ஜி.ஆர். நகர் வி.என். ஜானகி தெருவை சேர்ந்தவர் ஜான் ரவிசந்திரன் (41). ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் மனைவியை பிரிந்து, சித்ரா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

முதல் மனைவிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அவர் தனது பிள்ளைகளுடன் நாங்குநேரியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். 2-வது மனைவிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜான் ரவிசந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்