சிவகிரி அருகே வீடு புகுந்து நகை திருட்டு

சிவகிரி அருகே வீடு புகுந்து நகையை மர்மநபர் திருடி சென்றார்.

Update: 2021-06-26 21:50 GMT
சிவகிரி:
சிவகிரி அருகே ராயகிரி வடுகபட்டி மடத்து தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 46). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் அவர் மாலையில் வந்து பார்த்தபோது, வீட்டில் பீரோ திறந்து கிடந்ததையும், அதில் இருந்த 7 பவுன் நகைகள் திருடு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். 

இதற்கிடையே பாண்டியராஜின் வீட்டில் திருடுபோன நகைகளில் 4 பவுன் மட்டும் நேற்று அவரது வீட்டின் மாடியில் வீசப்பட்டு கிடந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகையை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்