நெல்லையில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் ஆய்வு
நெல்லையில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் ஆய்வு செய்தார்.
நெல்லை:
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி, உறுப்பினர் டாக்டர் ராமராஜ் ஆகியோர் நெல்லையில் குழந்தை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். அரசினர் கூர்நோக்கு இல்லம், மாவட்டத்தில் உள்ள குழத்தைகளுக்கான வரவேற்பு இல்லம், தனியாரால் நடத்தப்படும் திறந்தவெளி புகலிடம், மாவட்ட குழந்தை நலக்குழு மற்றும் சைல்டு லைன் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் ஆணைய உறுப்பினர் ராமராஜ் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் பதிவு பெற்ற குழந்தை பாதுகாப்பு இல்லங்களை ஆய்வு செய்து வருகிறோம். குழந்தைகளின் உரிமைகளை பாதிக்கும் எந்தவொரு செயலையும் அனுமதிக்கக்கூடாது. கவர்னர் உரையில் தெரிவித்தது போல், லோக்அயுக்தா சட்டம் வலுப்படுத்தப்பட்டால் குழந்தைகளின் பாதுகாப்பில் எவ்வித குறைபாடுகளும் இல்லாத நிலை ஏற்படும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளிகள் அரசு வெளியிட்டுள்ள இணையதள வழி கல்விக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும்’ என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.