கீழடி அருங்காட்சியக கட்டுமான பணிகள்-4 அமைச்சர்கள் ஆய்வு
கீழடி அருங்காட்சியக கட்டுமான பணிகளை 4 அமைச்சர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்புவனம்,
கீழடி அருங்காட்சியக கட்டுமான பணிகளை 4 அமைச்சர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
4 அமைச்சர்கள் ஆய்வு
இந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். கீழடி அகழாய்வில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருட்களையும் பார்வையிட்டனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழர்களின் பெருைம
அந்த அளவிற்கு இப்பகுதியில் தொன்மை வாய்ந்த நாகரிகம் மற்றும் கலாசாரம் குறித்த வரலாற்று சின்னங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக கீழடியை மையமாக வைத்து அதனைச் சுற்றி அகரம், கொந்தகை, மணலூர் என அகழ்வாராய்ச்சி விரிவடைந்து வருகிறது.
அருங்காட்சியக பணிகள்
இந்த பணியின் காலதாமதம் குறித்து அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எங்களை அழைத்து நேரில் சென்று பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார். அதன்படி இங்கு ஆய்வுக்கு வந்து உள்ளோம். இந்த அருங்காட்சியக பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் அருங்காட்சியக பணிகள் முடிக்கப்பட்ட உடன் சுற்றுலா பயணிகள், மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் கீழடி பகுதியில் புதிதாக சாலைகள், தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்து கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.