மாவட்டத்தில், நாளை முதல் 241 பஸ்கள் ஓடும்
ஊரடங்கு தளர்வால் சிவகங்கை மாவட்டத்தில் நாளை(திங்கட்கிழமை) முதல் 241 பஸ்கள் ஓடுகின்றன. இதையொட்டி பஸ்சின் இருக்கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டன.
காரைக்குடி,
ஊரடங்கு தளர்வால் சிவகங்கை மாவட்டத்தில் நாளை(திங்கட்கிழமை) முதல் 241 பஸ்கள் ஓடுகின்றன. இதையொட்டி பஸ்சின் இருக்கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டன.
பஸ் போக்குவரத்திற்கு அனுமதி
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பணிமனைகள்
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பகுதியில் போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளன.. இதில் காரைக்குடி பகுதியில் மானகிரி சாலையில் தலைமை போக்குவரத்து பணிமனையும், பழைய பஸ் நிலையம் பகுதியில் கிளை போக்குவரத்து பணிமனையும் இயங்கி வருகிறது. சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 2 மாவட்டங்களையும் அடங்கிய பணிமனையாக காரைக்குடி போக்குவரத்து கழக பணிமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதில் 60 விரைவு பஸ்களும், 35 புறநகர் பஸ்களும் உள்ளன.
கிருமிநாசினி தெளிக்கும் பணி
ஏற்கனவே கடந்த 45நாட்களுக்கும் மேலாக பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளதால் தினந்தோறும் காலையில் பஸ்களை இயக்கி பார்த்து ஓட்டுதல், பஸ்களின் கட்டுப்பாட்டு தன்மை, இருக்கைகள் சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை போக்குவரத்து கழக பணியாளர்கள் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முதல் பஸ்களின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தி கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பஸ் போக்குவரத்தில் 50சதவீத பயணிகள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பஸ்களின் உள்ள 3 இருக்கைகளில் 2 பேர் மட்டும் அமரும்படியும், 2 இருக்கைகள் இருக்கும் இருக்கையில் ஒருவர் மட்டும் அமரும்படி குறியீடுகள் போடும் பணியும் நடைபெற்று வருகிறது.
241 பஸ்கள்