திருமணிமுத்தாறு பாலங்கள் இடிக்கப்பட்டன

சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதற்காக திருமணிமுத்தாறு ஆற்று பாலங்கள் இடிக்கப்பட்டன.

Update: 2021-06-26 19:42 GMT
சேலம்
சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதற்காக திருமணிமுத்தாறு ஆற்று பாலங்கள் இடிக்கப்பட்டன.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
சேலம் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி சேலம் பழைய பஸ் நிலையத்தில் பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. பின்னர் ஈரடுக்கு பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அங்கு சுமார் 90 சதவீத கட்டுமான பணிகள் முடிந்துவிட்டன. அதேநேரத்தில் பஸ் நிலையம் அருகில் உள்ள திருமணிமுத்தாறு கரையோரம் அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஆற்றின் இருபுறமும் இரும்பு கம்பிகளால் வேலிகள் மற்றும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
பாலங்கள் இடிக்கும் பணி
இந்த நிலையில் திருமணி முத்தாறு ஆற்றின் குறுக்கே உள்ள 2 பாலங்கள் இடித்து அகற்றப்பட்டன. அதாவது பொக்லைன் எந்திரம் மூலம் அவை இடிக்கப்பட்டன.
சேலம் கலெக்டர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை வழியாக பழைய பஸ் நிலையத்திற்கு இந்த பாலங்களை கடந்து தான் செல்ல வேண்டும். தற்போது அதற்கு பதிலாக மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன.

மேலும் செய்திகள்