வீட்டின் பின்புறம் பதுக்கிய மதுபாட்டில்கள் பறிமுதல்; பெண் கைது
வீட்டின் பின்புறம் பதுக்கிய மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் பெண்ணை கைது செய்தனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் நத்தவெளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நத்தவெளி மேலத்தெருவை சேர்ந்த சகுந்தலா(வயது 48) என்பவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து சகுந்தலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.