குடியாத்தம்; ஆற்றில் அம்மன் கற்சிலை கண்டெடுப்பு
குடியாத்தம் ஆற்றில் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பாவோடும் தோப்பு செல்லியம்மன் கோவில் தெரு கவுண்டன்ய மகாநதி ஆற்றை ஒட்டியபடி உள்ளது.
அதே பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 22). வேலூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். அவருக்கு அருள்வாக்கு வந்துள்ளது. அப்போது ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அம்மன் சிலை இருப்பதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் மோகன்ராஜ் குறிப்பிட்ட இடத்தில் தோண்டிய போது ஆற்றில் இருந்து 2 அடி உயரம் உள்ள ஐந்து தலை நாகத்துடன் கூடிய அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து பொதுமக்கள் அம்மன் கற்சிலைக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து அருகே உள்ள சிவசக்தி கோவிலில் வைத்து பூஜை செய்தனர்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இதேபோல் மோகன்ராஜுக்கு அருள்வாக்கு வந்தபோது ஆற்றின் நடுவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் காட்டிய போது அங்கு சிவசக்தி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.