கடலூர் மத்திய சிறையில் தண்டனை கைதி திடீர் சாவு போலீஸ் விசாரணை

கடலூர் மத்திய சிறையில் தண்டனை கைதி திடீெரன உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-06-26 17:38 GMT
கடலூர் முதுநகர், 

கடலூர் அருகே கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.  

விழுப்புரம் மாவட்டம் காணைகுப்பம் வயலாமூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோதண்டபாணி. இவருடைய மகன் திருநானம் (வயது 33). இவர் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தண்டனை சிறைவாசி ஆக கடலூர் மத்திய சிறையில் இருந்து வந்தார். 

சாவு

நேற்று அதிகாலை இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு    கடலூர் மத்திய சிறையில் முதல் உதவி செய்துள்ளதாக தெரிகிறது. 

இதை தொடர்ந்து, அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து டாக்டரிடம் காண்பித்தனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் கடலூர் மத்திய சிறை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்