மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை

சாத்தான்குளம் அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-26 17:17 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே புதுக்குளம் செக்கடிவிளையைச் சேர்ந்தவர் ஞானராஜ். இவருடைய மனைவி ஜெபக்கனி (வயது 60). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் அவருக்கு குணமாகாமல் கண்ணில் வலி இருந்து கொண்டே இருந்தது. இதனால் மனமுடைந்த ஜெபக்கனி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்