இன்று மின்சாரம் நிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2021-06-26 16:52 GMT
சாயல்குடி, 
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கங்காதரன் வெளியிட்டுள்ள மின்தடை பற்றிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
திருப்புல்லாணி
அதன்படி ராமநாதபுரம் துணை மின் நிலையத்தில் திருப்புல்லாணி மின் பாதையில் பணி நடைபெறுவதால் எம்.ஜி.ஆர்.நகர், எம்.எஸ்.கே.நகர், திருப்புல்லாணி, அம்மன்கோவில், தெற்குத்தரவை, பசும்பொன் நகர், கூரியூர், பொக்கனேந்தல் மற்றும் பால்கரை அதையொட்டியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
ஏர்வாடி
ஏர்வாடி துணை மின்நிலையத்தில் ஏர்வாடி நகர் மின் பாதையில் பணி நடைபெறுவதால் ஏர்வாடி நகர், எஸ்.எம்.வலசை, பி.எம்.வலசை, சின்னஏர்வாடி, கடற்கரை, தொத்தன்மகன்வாடி, தர்கா மற்றும் அதையொட்டி உள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
நகரிகாத்தான்
நகரிகாத்தான் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் பாண்டுகுடி உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நகரிகாத்தான், பாண்டுகுடி, அஞ்சுகோட்டை, வாணி யேந்தல், பெருவாக்கோட்டை, ஆண்டாவூரனி, மணலூர், மங்களக்குடி, குஞ்சங்குளம், கூகுடி, எட்டுகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம்தடை செய்யப் படும் என திருவாடானை மின் வாரிய உதவி செயற் பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
கடலாடி
கடலாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கடலாடி சுற்றுவட்டார பகுதிகளான கடலாடி நகர் பகுதிகள் கருங்குளம் மற்றும் சமத்துவபுரம் உள்ளிட்ட இடங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று  காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை ஏற்படும் என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.
இதேபோல முதுகுளத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் விளக்கனேந்தல், மணலூர், கண்ணாத்தாள், மூலக்கரைப்பட்டி, கீழகுளம், பெருங்கருணை, விக்ரபாண்டியபுரம், வலசை குடியிருப்பு, மணக்குளம், கஞ்சிதாழியேந்தல், ஆரம்பத்தி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம்
இதே போல மண்டபம் துணை மின்நிலையத்தில் இருந்து ராமேசுவரம் துணை மின்நிலையத்திற்கு வரும் மின்பாதை மற்றும் ராமேசுவரம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வேர்கோடு மின்பாதை ஆகியவற்றில் பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தங்கச்சிமடம், செம்மமடம், அரியாங்குண்டு, பேய்கரும்பு, மெய்யம்புளி, பஸ் நிலையம், லட்சுமணதீர்த்தம், திட்டக்குடிதெரு, டி.வி.நிலையம், மார்க்கெட் தெரு, ரெயில்வே நிலையம், வேர்கோடு கரையூர், நம்பு கோவில், புதுரோடு, நடராஜபுரம், வடகாடு ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்