கஞ்சா விற்றவர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-26 15:55 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்ராஜ், சங்கா் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தூத்துக்குடி புதிய முனியசாமிபுரம் அருகே கோவில்பட்டி இலுப்பையூரணியை சேர்ந்த ஜெயராஜ் மகன் வினோத்குமார் (வயது 23) என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் வினோத்குமாரை கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக அவர் பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபற்றி அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்