கோவிலுக்குள் புகுந்து நகைகளை திருட முயன்ற 4 பேர் கைது

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு, கோவிலுக்குள் புகுந்து நகைகளை திருட முயன்ற 4 பேர் கைது செய்தனர்.

Update: 2021-06-26 04:14 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள திருமணம் கிராமத்தில் தாத்ரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் பரம்பரை அறங்காவலராக யுவகுமார் (வயது 52) என்பவர் உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கோவிலுக்குள் ஆபரணங்கள் மற்றும் சொத்துகளை திருட 8 நபர்கள் நுழைந்துள்ளனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் கோவில் அறங்காவலர் யுவகுமார் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் திருடர்களை விரட்டிச்சென்றனர். அவர்களில் 4 பேரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். மேலும் 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து யுவகுமார் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கோவிலுக்குள் புகுந்து ஆபரணங்கள் மற்றும் சொத்துகளை திருட முயன்றதாக திருவள்ளூரை அடுத்த திருமணம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் (35), வேலு (30) உள்பட 4 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்