களக்காடு பகுதியில் இன்று மின்தடை
களக்காடு பகுதியில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
வள்ளியூர்:
வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட களக்காடு துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின்வினியோகம் பெறும் கோதைசேரி, வன்னியன்குடியிருப்பு, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை வள்ளியூர் மின்வினியோக செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.