பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் இடமாற்றம்
பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் பாளையங்கோட்டை உதவி கமிஷனராக (சட்டம்-ஒழுங்கு) இருந்த ஜான் பிரிட்டோ, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டாக இருந்த நாகசங்கர், பாளையங்கோட்டை உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி. திரிபாதி பிறப்பித்துள்ளார்.