லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-25 20:03 GMT
கரூர்
கரூர்
கரூர் மாவட்டம், மாயனூர் போலீஸ் சரகம் சித்தலவாய், மஞ்சமேடு பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாயனூர் போலீசார் சித்தலவாய், மஞ்சமேடு பகுதிகளில் ரோந்து சென்ற போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த கிருஷ்ணராயபுரம் பகுதி புதுத்தெருவை சேர்ந்த பாபு என்கிற ஜான்பாட்சா (வயது 37) மற்றும் திருக்காம்புலியூரை சேர்ந்த ராமு (50) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்