அரவக்குறிச்சியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
அரவக்குறிச்சியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரவக்குறிச்சி
கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ள இந்து கோவில்களை திறக்கக்கோரி கரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல, அரவக்குறிச்சி மாரியம்மன் கோவில் முன்பு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.