மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
சாத்தூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சாத்தூர்,
ஆனி மாத வெள்ளிக்கிழமையையொட்டி சாத்தூரில் முக்குராந்தலில் உள்ள மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு பால், பன்னீர், தேன், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொரோனா ஊரடங்கினால் பக்தர்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.