கல்குவாரியில் வெடி விபத்து; 2 தொழிலாளர்கள் படுகாயம்

கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-06-25 18:45 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறையில் ஒரு கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் சேலத்தை சேர்ந்த தமிழ் (வயது 20), குப்புசாமி (29) ஆகியோர் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கல் உடைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட வெடி திடீரென வெடித்தது. இதில் தமிழ், குப்புசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்குவாரி செயல்பட அனுமதி உள்ளதா? வெடி விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்