பேரணாம்பட்டு அருகே மாணவியை கடத்திய கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது
பேரணாம்பட்டு அருகே மாணவியை கடத்திய கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு அடுத்த நாவிதம்பட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி தற்போது பிளஸ் -2 முடித்துள்ளார். இவர் கடந்த 23-ந் தேதியன்று காணாமல் போனார். அவரை கார்க்கூர் கொத்தமாரிக்குப்பம் கிராமத்தை கல்லூரி மாணவர் கவுதம் (21) என்பவர் கடத்தி சென்றுள்ளதாக மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மேல்பட்டி பஸ் நிறுத்தத்தில் மாணவியுடன் நின்றிருந்த கவுதமை போலீசார் பிடித்து மாணவியை மீட்டனர். மேலும் கல்லூரி மாணவர் கவுதமை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.