கல்வராயன்மலையில் 2700 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 2700 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Update: 2021-06-25 16:43 GMT
கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உள்ளிட்ட போலீசார் கல்வராயன் மலையில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தாழ்மொழிப்பட்டு வனப்பகுதியில் 600 லிட்டர் சாரய ஊறல், கீழ்நிலவூர் ஓடையில் 1,500 லிட்டர் சாராய ஊறல், கிணத்தூர் வனப்பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். இது தொடர்பாக தாழ்மொழிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் அழகுராஜா, கீழ்நிலவூர் ஆண்டி, கிணத்தூர் ஏழுமலை ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.  

மேலும் செய்திகள்