திருச்செந்தூர் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர் மீது வழக்கு
திருச்ெசந்தூர் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே திருமணம் ெசய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை பலாத்காரம் ெசய்த போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
போலீஸ்காரர்
திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தைச் சேர்ந்தவர் சேவியர். இவருடைய மகன் ஜாக்சன் (வயது 25). இவர் தூத்துக்குடி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இவரது சொந்த ஊரைச் சேர்ந்த 22 வயதான பட்டதாரி இளம்பெண், அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுவதற்கு உதவும் வகையில் ஜாக்சனிடம் அடிக்கடி பேசி வந்தார். அப்போது ஜாக்சன் அந்த பெண்ைண திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறினார்.
திருமணம் செய்ய மறுப்பு
பின்னர் ஜாக்சன் அந்த பெண்ைண காரில் சொக்கன்குடியிருப்பு ஆலயத்துக்கு அழைத்து சென்றார். அப்போது காரில் வைத்து இளம்பெண்ணை ஜாக்சன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்ய ஜாக்சன் மறுத்து விட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஜாக்சன் மீது திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.