தனியார் நிறுவன மேலாளர் கொலை; மேலும் ஒரு வாலிபர் கைது

ஆலங்குளம் அருகே தனியார் நிறுவன மேலாளர் கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-24 21:52 GMT
ஆலங்குளம்:
சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 51). இவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுப்பையாபுரத்தில் உள்ள தனியார் சோலார் மின் நிறுவனத்தின் மேலாளராக இருந்தார். கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி தியாகராஜனை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது.

இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை தொடர்பாக கார்த்திக் (22), சத்யா (21), காளிராஜன் (24), முருகன் (39) ஆகிய 4 பேர் அம்பை குற்றவியல் நடுவர் மன்றத்தில் சரண் அடைந்தனர். நெட்டூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் கண்ணன் என்பவரை ஆலங்குளம் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய அய்யனார்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் முத்தையா என்ற கார்த்திக் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்