விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு

மானூர் அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு போனது.

Update: 2021-06-24 20:58 GMT
மானூர்: 
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்கு வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயி. இவருடைய மனைவி இசக்கியம்மாள் (வயது 55). இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. மகன்கள் 2 பேரும் குஜராத்தில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள். எனவே மருமகள்கள் பிரேமா மற்றும் கவிதா ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இசக்கியம்மாள் குடும்பத்துடன் அதே ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து இசக்கியம்மாள் மானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடுபுகுந்து நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்