ஒரே நாளில் 419 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 419 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 7 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

Update: 2021-06-24 20:40 GMT
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 419 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 7 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.
419 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து  வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 472 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று 419 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதியில் 71 பேர், சேலம் ஒன்றியத்தில் 26 பேர், சங்ககிரியில் 24 பேர், ஓமலூரில் 20 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 19 பேர், எடப்பாடி, தாரமங்கலம், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதியில் தலா 15 பேர், வீரபாண்டியில் 13 பேர், தலைவாசலில் 12 பேர், கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி ஆகிய பகுதியில் தலா 10 பேர், காடையாம்பட்டி, ஆத்தூரில் தலா 9 பேர், கொங்கணாபுரம், மேட்டூரில் தலா 7 பேர், மகுடஞ்சாவடியில் 6 பேர், பனமரத்துப்பட்டி, வாழப்பாடியில் தலா 5 பேர், நரசிங்கபுரத்தில் 3 பேர், கெங்கவல்லியில் 2 பேர், ஏற்காட்டில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
3,127 பேருக்கு சிகிச்சை
சேலம் மாவட்டத்துக்கு கரூரில் இருந்து வந்த 14 பேர், ஈரோடு, தர்மபுரியில் இருந்து வந்த தலா 13 பேர், திருச்சி, நாமக்கல்லில் இருந்து வந்த தலா 12 பேர், கிருஷ்ணகிரியில் இருந்து வந்த 11 பேர், கோவையில் இருந்து வந்த 10 பேர், வேலூரில் இருந்து வந்த 8 பேர், கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த 7 பேர், சென்னையில் இருந்து வந்த 5 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 725 ஆக உயர்ந்துள்ளது. ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்ற 710 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.. 3 ஆயிரத்து 127 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
7 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 7 பேர் கொரோனாவுக்கு பலியாயினர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,423 ஆக அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்