குடோனில் பதுக்கி வைத்திருந்த 2 டன் குட்கா பறிமுதல் 4 பேர் கைது

சேலத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 2 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் ரூ.33 லட்சம் ெராக்கமும் சிக்கியது.

Update: 2021-06-24 20:40 GMT
சேலம்
சேலத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 2 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் ரூ.33 லட்சம் ெராக்கமும் சிக்கியது.
தீவிர சோதனை
குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தமிழகத்தில் தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சேலம் மாநகர் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த சிலர் மளிகை கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள்  நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடாவிற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குட்கா விற்பனை செய்பவரை கைது செய்யக்கோரி செவ்வாய்பேட்டை போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு செவ்வாய்பேட்டையில் ஒவ்வொரு கடையாக தீவிர சோதனை நடத்தினர். 
2 டன் குட்கா
அப்போது ராஜஸ்தானை சேர்ந்த பரத்சிங் (வயது 32) என்பவரது மளிகை கடையில் சோதனை நடத்தினர். அங்கு குட்கா பொருட்கள் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் மகுடஞ்சாவடி பகுதியில் ஒரு குடோனில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக கூறினார்.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரது குடோனில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 150 மூட்டைகள், 20 அட்டைப்பெட்டிகளில் 2 டன் குட்கா இருப்பது தெரியவந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
4 பேர் கைது
தொடர்ந்து போலீசார் குட்காவை பதுக்கி வைத்திருந்த பரத்சிங். அவரது தம்பி தீப்சிங் (24), கடையில் வேலை பார்த்து வரும் ஓம்சிங் (27), குடோனில் பணியாற்றி வரும் மகுடஞ்சாவடியை சேர்ந்த மதன் (40) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.33 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறும்போது கைது செய்யப்பட்டு உள்ள 4 பேரிடம் எங்கிருந்து குட்கா பொருட்கள் வாங்கி வந்தனர். யார்? யாருக்கு இதுவரை மொத்தமாக விற்பனை செய்து உள்ளனர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

மேலும் செய்திகள்