அறந்தாங்கி அருகே அரசு பள்ளியில் 35 மடிக்கணினிகள் திருட்டு

அறந்தாங்கி அருகே அரசு பள்ளியில் 35 மடிக்கணினிகள் திருட்டு போயின

Update: 2021-06-24 20:00 GMT
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 664 மாணவர்கள் படித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மூடப்பட்டுள்ளது. தற்போது, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வேதியியல் ஆய்வகத்தில் 35 மடிக்கணினிகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் நேற்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மலையப்பன் வேதியியல் ஆய்வகத்திற்கு சென்றபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 35 மடிக்கணினிகள்  திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்