திருப்புவனம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

100 நாள் வேலையை நீண்ட தூரத்துக்கு கொடுப்பதாக கூறி திருப்புவனம் யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-06-24 19:58 GMT
திருப்புவனம்,

திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கிளாதரி ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள கோனார்பட்டி, மணப்பட்டி, சங்கம்பட்டி, லெட்சுமிபுரம், கக்கி‌னாம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 100 பெண்கள் நேற்று மதியம் திருப்புவனம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த பெண்கள் கூறியதாவது:-
நாங்கள் மேற்கண்ட 5 கிராமங்களை சேர்ந்த 100 நாள் வேலை திட்டத்தில் வேைல பார்த்து வருபவர்கள். தங்கள் ஊருக்கு அருகே உள்ள கோனார் கண்மாயில் வேலை பார்த்து வந்தோம். தற்போது ஊராட்சி மன்ற தலைவர் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிளாதரி கண்மாய்க்கு சென்று வேலை பார்க்குமாறு கூறுகிறார். தங்களால் அவ்வளவு தொலைவுக்கு சென்று வேலை பார்க்க முடியாது. எனவே தங்கள் கிராமத்துக்கு அருகிலேயே வேலை தரும்படி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பின்னர் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) லெட்சுமணராஜூவிடம் தாங்கள் கோனார் கண்மாயில் தொடர்ந்து வேலை பார்க்க உதவ வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுப்பதாகவும் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில் மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்