நிலத்தகராறில் தாக்கப்பட்ட விவசாயி சாவு
உசிலம்பட்டி அருகே நிலத்தகராறில் தாக்கப்பட்ட விவசாயி இறந்தார். இது தொடர்பாக தந்தை-மகனை கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
உசிலம்பட்டி, ஜூன்.
உசிலம்பட்டி அருகே நிலத்தகராறில் தாக்கப்பட்ட விவசாயி இறந்தார். இது தொடர்பாக தந்தை-மகனை கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நிலத்தகராறு
உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 67). விவசாயி. இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஒச்சு (55) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அடித்துக்கொலை
இதில் ஆத்திரம் அடைந்த ஒச்சு, அவரது மகன் ராஜபாண்டி (27) ஆகிய இருவரும் சேர்ந்து பாண்டியை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த பாண்டியை அக்கம், பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
தந்தை-மகன் கைது
இதற்கிடையே உத்தப்பநாயக்கனூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஒச்சு, அவரது மகன் ராஜபாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.