மழையால் வீட்டுச்சுவர் இடிந்தது

மழையால் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது.

Update: 2021-06-24 19:26 GMT
வி‌.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முனியங்குறிச்சி தெருவை சேர்ந்த மதியழகனின் மகன் புருஷோத்தமன்(வயது 36). இவர் வி.கைகாட்டியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். தற்போது ஊரடங்கு காரணமாக அவர் வேலையின்றி வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர் மண் சுவருடன் கூடிய ஓட்டு வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அரியலூர் மாவட்டத்தில் இரவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அவர் குடியிருந்து வரும் ஓட்டு வீட்டின் ஒரு பக்க மண் சுவர் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. சுவர் வெளிப்புறமாக சாய்ந்ததால், குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். மேலும் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அந்த குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்