கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகை

கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-06-24 19:16 GMT
மங்களமேடு,

தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரண நிதியின் 2-வது தவணை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்ளின் தொகுப்பு ஆகியவை அகரம் சீகூர் ரேஷன் கடையில் பாதி பேருக்கு வழங்கப்பட்ட நிலையில், மீதியுள்ளவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதுகுறித்து கடை விற்பனையாளரிடம் பெண்கள் கேட்டபோது, தாசில்தாரிடம் சென்று கேட்குமாறு கூறியதாக தெரிகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர். ஜமாபந்தி காரணமாக கிராம நிர்வாக அலுவலர் குன்னம் சென்றுவிட்டதால் அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டது குறித்து தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்ச்செல்வன், செயலாளர் சுமதி செல்வம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது, இன்னும் 2 நாட்களில் அனைவருக்கும் அரசின் நிவாரண பொருட்கள் கிடைக்கும் என்று அவர்கள் உறுதி அளித்ததன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்