இரட்டைக் கொலைக்கு காரணம் என்ன?

கன்னியாகுமரியில் நடந்த இரட்டை கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2021-06-24 18:54 GMT
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் நடந்த இரட்டை கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.
2 பேர் கொலை
இரட்டை கொலை சம்பவம் குமரி மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரியில் 2 பேர் பிணமாக மீட்கப்பட்டு உள்ளனர். ஒருவர் சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவம் கஞ்சா போதையில் நடந்திருக்க வாய்ப்புகள் இல்லை. கொலை சம்பவம் கும்பலாக சேர்ந்து நடந்ததா? அல்லது 3 பேரும் மாறி மாறி தாக்கிக் கொண்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. குமரி மாவட்டத்தில் ரவுடிகள் எங்கும் கிடையாது. எனவே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தனிப்படை அமைப்பு
மேலும் கொலை சம்பவம் பற்றி விசாரணை நடத்த தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக கொலை நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மோப்ப நாய் ஏஞ்சல் மூலமும் துப்பு துலக்கப்பட்டது.

மேலும் செய்திகள்