நிவாரண பொருட்கள்

முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2021-06-24 18:11 GMT
அருப்புக்கோட்டை,

தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தரப்பினர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இந்நிலையில் அருப்புக்கோட்டையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி தாசில்தார் ரவிச்சந்திரனிடம் மனு விடுத்தனர். இதனை அடுத்து தன்னார்வலர்கள் உதவியுடன் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தாசில்தார் ரவிச்சந்திரன், டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.

மேலும் செய்திகள்