ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய் கரையில் முனியாண்டி கோவில் உள்ளது இந்த முனியாண்டி கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிறகு முனியாண்டிக்கு ரொட்டி படையல் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பெரியவர்கள், குழந்தைகளுக்கு கொரோனா ெதாற்று பாதிப்பு ஏற்படக்கூடாது என சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.