தேசூரில் மின்சாரம் தாக்கி தாய்-மகன் கருகி பலி
தேசூரில் மின்சாரம் தாக்கி தாய், மகன் உடல் கருகி இறந்தனர்.
சேத்துப்பட்டு
தேசூரில் மின்சாரம் தாக்கி தாய், மகன் உடல் கருகி இறந்தனர்.
துணிகளை கம்பியில் உலர வைத்தார்
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் பேரூராட்சி ேமட்டுத்தெருவில் வசித்து வந்தவர் லோகநாயகி (வயது 65). இவரின் மகன் சிவக்குமார் (35). இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.
லோகநாயகி நேற்று மதியம் துணிகளை துவைத்து, வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு கம்பியில் உலர வைத்திருந்தார். அதன் அருகில் ஒரு மின்வயர் இருந்தது. வெயிலில் காய்ந்திருந்த துணிகளை மாலையில் எடுக்க அவர் மறந்து விட்டார்.
மின்சாரம் தாக்கியது
நேற்று இரவு 7 மணியளவில் அந்தப் பகுதியில் லேசான காற்றுடன் மழை பெய்தது. அப்போது லோகநாயகி தனது வீட்டின் தோட்டத்தில் உலர வைத்திருந்த துணிகளை எடுப்பதற்காக சென்றார். மழையால் வயரில் சென்ற மின்சாரம் துணிகளை உலர வைத்திருந்த கம்பியில் கசிந்திருந்தது.
லோகநாயகி கம்பியில் உலர வைத்திருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தபோது, திடீெரன அவரை மின்சாரம் தாக்கியது. அவர், கூச்சலிட்டு சத்தம்போடவே அருகில் நின்றிருந்த மகன் சிவக்குமார் ஓடி வந்து லோகநாயகியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேேய உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
சோகம்
இதுபற்றி தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேசூர் போலீசார் இருவரின் பிணங்களையும் கைப்பற்றி வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.