அத்தியாவசிய பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள்

வலங்கைமான் அருகே சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு அத்தியாவசிய பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்களால் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-24 17:34 GMT
வலங்கைமான்:
வலங்கைமான் அருகே சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு அத்தியாவசிய பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்களால் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 
கொரோனா பரவும் அச்சம் 
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துடன் இணைந்த அங்காடிகள் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வகையில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழக அரசு அறிவித்த 14 வகையான மளிகை பொருட்கள், கொரோனா நிவாரணம் ரூ.4 ஆயிரம் பெறுவதற்காக டோக்கன் வினியோகிக்கப்பட்டு அதற்காக பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் நேற்று வலங்கைமானை அடுத்த லாயம் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு அங்காடியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்து பொதுமக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும் நின்று கொண்டிருந்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்