950 மதுபாட்டில்களை கடத்தி வந்த 4 பேர் கைது

950 மதுபாட்டில்களை கடத்தி வந்த 4 பேர் கைது

Update: 2021-06-24 16:56 GMT
950 மதுபாட்டில்களை கடத்தி வந்த 4 பேர் கைது
கோவை


கொரோனா ஊரடங்கு காரணமாக கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.  

இந்த நிலையில் அண்டை மாநிலங்களில் இருந்து மது பாட்டில்களை கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

குறிப்பாக கர்நாடகாவில் இருந்து அதிகளவில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுகிறது. இந்த நிலையில் கோவை ராமநாதபுரம் போலீசார் திருச்சி ரோட்டில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது ராமநாதபுரம் அருகே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை நிறுத்தி சோதனை செய்தனர். 

அதில் 950 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் காரில் மது பாட்டில்களை கடத்தி வந்த முத்துக்குமார் (வயது 39), பிரேம் (26), கோபாலகிருஷ்ணன் (30), சூர்யா (25) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்கள் காரில் கடத்தி வந்த 950 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 37 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்