3 பேர் உயிரை பறித்த கொரோனா
தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்தனர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த மாதம் தினமும் 700-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். அந்த பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது.
மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 995 ஆக உயர்ந்தது.
சிகிச்சை பெற்று வந்தவர்களில் 158 பேர் நேற்று குணமாகினர். தற்போது 801 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கூடலூரை சேர்ந்த 62 வயது மூதாட்டி, பெரியகுளம் பகுதியை சேர்ந்த 73 வயது முதியவர், 75 வயது முதியவர் ஆகிய 3 பேர் நேற்று உயிரிழந்தனர்.
மாவட்டத்தில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்புக்கு 479 பேர் பலியாகி உள்ளனர்.