தென்காசியில் புதிதாக 49 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 26 ஆயிரத்து 370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 25 ஆயிரத்து 415 பேர் வீடு திரும்பி உள்ளனர். 501 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.