செங்கோட்டையில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா

நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி செங்கோட்டையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

Update: 2021-06-23 21:36 GMT
செங்கோட்டை:
செங்கோட்டையில் நடிகர் விஜய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தென்காசி மாவட்ட நண்பன் விஜய் இயக்கம் சார்பில் மேலஇலஞ்சி ஆரம்ப ஜோதி ஆதரவற்றோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜா தலைமை தாங்கினார். நகர ஒருங்கிணைப்பாளா் முத்துவிக்னேஷ், அருண், இலஞ்சி விஜய், செங்கோட்டை விக்னேஷ் சுடலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனா். நிர்வாகக்குழு உறுப்பினா் செந்தில் வரவேற்று பேசினார். 

பின்பு ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி ஞானஅமிர்தத்திடம் காலை உணவு, இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனைதொடா்ந்து செங்கோட்டை நகராட்சி தூய்மை பணியாளா்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதேபோல் செங்கோட்டை பகுதியில் வசிக்கும் வறுமையில் வாடும் சுமார் 10 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி அடங்கிய தொகுப்பு பை வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்