ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு

கொரோனா நிவாரணம் ரேஷன்கடைகளில் சரியாக வழங்கப்படுகிறதா என கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-23 19:02 GMT
ஆற்காடு
கொரோனா நிவாரணம் ரேஷன்கடைகளில் சரியாக வழங்கப்படுகிறதா  என கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அரசு சார்பில் கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் 2 தவணையாகவும் 14 வகையான இலவச பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆற்காடு தாலுகா புதுப்பாடி, கரிக்கந்தாங்கல், கே.வேளூர் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா இரண்டாம் தவணை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான பொருட்கள் மற்றும் இலவச அரிசி வழங்கப்படுகிறதா என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்ப ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். 
அப்போது ரேஷன் கடைகளில் உள்ள இருப்பு விவரம் மற்றும் வழங்கப்பட்ட பொருட்களின் அளவு விவரங்கள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் ரேஷன் பொருட்கள் தரமாக வழங்கப்படுகிறதா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார் அப்போது ஆற்காடு தாசில்தார் காமாட்சி மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்