சிறுமிக்கு திருமணம் நடத்த முயன்றது தொடர்பாக 5 பேர் கைது

சிறுமிக்கு திருமணம் நடத்த முயன்றது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-23 17:02 GMT
பேரையூர்,ஜூன்
பேரையூர் அருகே சின்னாரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், ஊர் நல அலுவலர் கருப்பாயி, பேரையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ சுலோச்சனா, சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், உதயசூரியன் மற்றும் போலீசார், அந்த கிராமத்துக்குச் சென்று சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் இது குறித்து ஊர் நல அலுவலர் கருப்பாயி பேரையூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், குழந்தை திருமணம் செய்ய ஏற்பாடு செய்த ராஜேஷ், வேலுச்சாமி, பிச்சைமணி, ராமர், சுமதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்