42 பேருக்கு கொரோனா

42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

Update: 2021-06-23 16:40 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 42 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 19 ஆயிரத்து 442 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 87 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 18 ஆயிரத்து 638 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 475 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 329 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்