தூத்துக்குடியில் மனைவி மீது தாக்குதல் தொழிலாளி கைது
தூத்துக்குடியில் நடந்தையில் சந்தேகத்தால் மனைவியை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடியில் நடந்தையில் சந்தேகத்தால் மனைவியை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நடத்தையில் சந்தேகம்
தூத்துக்குடி முத்தையாபுரம் சூசை நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 43). தொழிலாளி. இவரது மனைவி விஜயா (35) முருகன் அவரது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கடந்த 2 மாதத்திற்கு முன் விஜயா முள்ளக்காட்டில் உள்ள அவரது தம்பியுடன் வசித்து வருகிறார்.
மனைவி மீது தாக்குதல்
இந்த நிலையில் விஜயா தவறாக நடப்பதாக கூறி அவரது கணவர் முருகன் நேற்று விஜயாவை அவர் வேலைக்குச் சென்ற இடத்தில் அசிங்கமாக பேசியுள்ளார். அப்போது திடீரென்று கீழே கிடந்த கட்டையை எடுத்து விஜயாவின் தலையில் அவர் தாக்கியுள்ளார்.அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்தோடியது. அதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் சத்தம் போடவும் விஜயாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு முருகன் தப்பிச் சென்றுள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் விஜயாவை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில்சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது
இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முருகனை கைது செய்தார்.