மதுரை பி.பீ.குளம் சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் அருள்பாண்டியன் (வயது 28). சம்பவத்தன்று இவருடைய பாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது ஒரு பெண் அங்கு வந்தார். அவர் பாட்டியிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு முதியோர் உதவித்தொகை வாங்கி தரும் வேலை செய்வதாக கூறினார். மேலும் அந்த பாட்டிக்கும் உதவித்தொகை பெற்று தருவதாக உறுதி அளித்தார். அதற்காக காது, கழுத்தில் தங்க நகைகள் எதுவும் இல்லாமல் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது பாட்டி அணிந்திருந்த ஒரு பவுன் தங்க தோடை கழற்றி வைத்து புகைப்படம் எடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். அவர் சென்ற பிறகு பாட்டியின் தங்கதோடு காணவில்லை. இது குறித்து பாட்டியின் பேரன் அருள்பாண்டியன் தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.