திருச்சி விமான நிலையத்தில் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல்? 5 பேரிடம் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

Update: 2021-06-22 19:09 GMT

செம்பட்டு, 
திருச்சி விமான நிலையத்தில் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

தங்கம் கடத்தல்

திருச்சி விமான நிலையத்திற்கு தற்போது வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.

இந்தநிலையில் ஷார்ஜாவில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று காலை திருச்சிக்கு வந்தது. இந்த விமானத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

கிலோ கணக்கில் பறிமுதல்

இதைதொடர்ந்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை அவர்கள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த 5 பயணிகளிடம் தொடர் சோதனை நடத்தப்பட்டு அவர்களிடமிருந்து கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. 

மேலும் அவா்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் தான், பயணிகள் விவரம், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் விவரம் தகவல்கள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்