காரைக்குடி,ஜூன்
செட்டிநாடு போலீஸ் சரகம், கானாடுகாத்தான் ராஜா வீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 52). கானாடுகாத்தான் பஜார் பகுதியில் பால் கடை வைத்துள்ளார். இவர் தனது வீட்டின் முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை. இது குறித்து அவர் செட்டிநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இந்த நிலையில் திருடிய மொபட்டோடு சூரக்குடி அருகே சென்று கொண்டிருந்த கற்காத்தக்குடியை சேர்ந்த குணசேகரனை (58) போலீசார் கைது செய்து மொபட்டை மீட்டனர். கைது செய்யப்பட்ட குணசேகரன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.